Stay Connected...Subscribe Now

டாப் 5 புரொஃபஷனல் காமிராக்கள் – ஒரு பார்வை!

 

தொழில்முறை புகைப்படக்காரர்கள் இதுதான் பெஸ்ட் காமிரா என்று முழுமையாக எதையும் அத்தனை சுலபத்தில் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அப்படி அரிதாக பாராட்டுக்களைப் பெற்ற முதல் 5 காமிராக்களை பட்டியலிட்டுள்ளோம். தரவரிசை என்பது விலையைப் பொறுத்தல்ல, தரத்தைப் பொறுத்ததே!

 

1. நிக்கான் டி 7000 (பாடி மட்டும்)

இன்றைய தேதிக்கு புகைப்படக்காரர்களின் செல்லம் இதுதான். ஸ்பீட், ஒளியின் துல்லியம், பேட்டரி என பல வகையிலும் பக்கா புரொபஷனல் கேமிரா.

விலை ரூ 50000-க்குள் வருவது இதன் சிறப்பு.

 

 

2. கேனன் EOS Rebel T3i (with 18-55mm IS II lens)

ரூ 50000-க்குள் ஒரு தொழில்முறை கேமிரா வேண்டும் என்றால், இந்த மாடலுக்குப் போகலாம். உங்கள் கற்பனைக் குதிரை பாயும் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் காமிரா இது. குறிப்பாக வீடியோ ஆப்ஷனுக்கு பெஸ்ட் சாய்ஸ் இது.

விலை ரூ 45000-க்குள்!

 

 

3. சோனி சைபர் ஷாட் டிஎஸ்ஸி – ஆர்எக்ஸ் 100

குறைந்த விலையில் ஒரு நல்ல புரொபஷனல் கேமிரா பார்ப்பவர்களுக்கு ஏற்ற காமிரா. டிசைன், புகைப்பட துல்லியம், வேக லென்ஸ்கள் என எல்லாமே சிறப்பாக உள்ளது.

விலை ரூ 34000 வரை இருக்கும்.

 

 

4. சோனி ஆல்பா NEX-7 (with 18-55mm lens)

கொஞ்சம் விலை அதிகம்தான்…

ஆனால் பெஸ்ட் குவாலிட்டி வேண்டும் என்றால் இந்த காமிராவை தேர்வு செய்யலாம்.

ரூ 80000 வரை செலவு செய்யத் தயாராக இருங்கள்.

 

 
5. கேனன் பவர் ஷாட் SX260 HS (Black)

சிக்கனமான விலை. சிறப்பான தரம். ஆனால் தரத்துக்கும் இந்த விலைக்கும் சம்பந்தமே இல்லை எனலாம். தொழில்முறை புகைப்படக்காரர்கள் என்றில்லாமல், சாதாரணர்களும் பயன்படுத்தலாம்.

விலை ரூ 20000-க்குள்தான்!

Speak Your Mind

*