Stay Connected...Subscribe Now

ரஜினியின் சிவாஜி 3 டி… டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் வரும் முதல் இந்தியப் படம்!


சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள சிவாஜி 3 டி படம், டால்பி அட்மாஸ் (Dolby Atmos) எனும் புதிய ஒலித் தரத்தில் வெளியாகிறது.

இந்தியாவிலேயே இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளியாகும் முதல் திரைப்படம் என்ற பெருமையை இதன் மூலம் சிவாஜி 3 டி பெறுகிறது.

அதுமட்டுமல்ல, சூப்பர் ஸ்டார் முதல் 3 டி படம் என்ற பெருமையும் இந்தப் படத்தையே சேர்கிறது.

“சமீப ஆண்டுகளில், சினிமா தொழில் நுட்பத்தில் எங்களின் புதிய பெருமைக்குரிய கண்டுபிடிப்பு இந்த டால்பி அட்மாஸ் ஒலித் தரம். இதன் மூலம், ஒரு காட்சியின் நிஜ ஒலித் திறனை, அதன் தன்மை மாறாமல் உணரமுடியும். ரஜினியின் சிவாஜி படம் மூலம் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி,” என்றார் டால்பி லேப் நிறுவனத்தின் பங்கஜ் கேடியா.

இந்த தொழில்நுட்ப வசதியை அனுபவிக்க அதற்கேற்ற தரமுயர்த்தப்பட்ட அரங்குகள் தேவை. அந்த வகையில் இந்தியாவிலேயே அத்தகைய வசதி கொண்ட முதல் திரையரங்கமாக சென்னை சத்யம் சினிமாஸின் செரீன் அரங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Speak Your Mind

*