Stay Connected...Subscribe Now

‘ஸாரி… மேப் தப்பாயிடுச்சி’ – ஆப்பிள் சிஇஓ

சான் பிரான்சிஸ்கோ: ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளத்தில் தரப்பட்டிருந்த வரை படத்தில் இருந்த பிழைகளுக்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கோரினார் ஆப்பிள் சிஇஓ டிம் குக்.

கடந்த வாரம் ஆப்பிள் தனது ஐஒஎஸ் இயங்கு தளத்தில் தந்திருந்த ஒரு வரைபடத்தில் சில குறைபாடுகள் இருந்ததால் ஆப்பிளின் வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய சலசலப்பும், குழப்பமும் ஏற்பட்டது.

தனது வாடிக்கையாளர்களின் கோபம் தெரியவந்ததும், ஆப்பிளின் தலைமை செயல் அலுவலர் டிம் குக், நடந்த தவறுக்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும் புதிய வரைபடத்தில் உள்ள குழப்பங்களுக்காக வருந்துவதாகவும் அவர் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆப்பிளைப் பொறுத்தவரை மன்னிப்பு கேட்பது என்பது எப்போதாவதுதான் நடக்கும். ஆனால் இந்த புதிய வரைபடத்தில் தகவல்கள் மற்றும் படங்கள் ஆகியவை துல்லியமாக இல்லாததால், மற்ற நிறுவனங்கள் ஆப்பிளை விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டன.

இந்த விமர்சனம் வாடிக்கையாளர்கள் வாயிலிருந்து வரும் முன்பு, தாமே முன் வந்து மன்னிப்புக் கேட்டுள்ளார் ஆப்பிள் சிஇஓ!

-டெக்ஸோன்

Speak Your Mind

*