Stay Connected...Subscribe Now

ஐபோன் 5-க்கு அபார வரவேற்பு… ஆப்பிள் ஸ்டோர்களில் அலைமோதும் கூட்டம்!

சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் ஸ்டோர்களில் ஐபோனின் லேட்டஸ்ட்  மாடலை வாங்க இப்போதே தவம் கிடக்கத் தொடங்கிவிட்டனர் வாடிக்கையாளர்கள்.

4 அங்குலத் திரை, 4 ஜி சர்வீஸ் என அதிநவீனமாக வந்துள்ள இந்த மொபைல் இப்போது சிங்கப்பூர் உள்ளிட்ட 2 நாடுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

முதல் மூன்று தினங்களுக்குள்  5 மில்லியன் போன்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. இப்போது பெரும்பாலான ஆப்பிள் ஸ்டோர்கள் ஸ்டாக் இல்லை என்று கூறி வருவதால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

இன்னும் சில ஸ்டோர்களில் வரவிருக்கிற ஸ்டாக்குக்காக இப்போதே க்யூவில் நிற்கின்றனர் வாடிக்கையாளர்கள்.

ஐபோன் -5 -ல் மேப் சர்வீஸில் குறைகள் இருப்பதாக கூறப்பட்டு, அதற்கு ஆப்பிள் நிர்வாகம் மன்னிப்பு கோரியது நினைவிருக்கலாம். இருந்தாலும் ஐபோன் -5 சிறப்பாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Speak Your Mind

*