Stay Connected...Subscribe Now

ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் சூப்பர்சானிக் சோதனை வெற்றி!

பாலசோர் (ஒடிஸா): எதிரிகளின் ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் சூப்பர்சானிக் ஏவுகணையை ஏவும் சோதனையில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

நீண்ட தூரம் சென்று இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை தயாரிப்பதில் இந்தியா  முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த வகையில் இந்திய பாதுகாப்பு படையில் மேலும் ஒரு  மைல்கல்லாக, எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை  பெற்ற சூப்பர்சானிக் ஏவுகணையை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

ஒடிஸா மாநிலம் பாலசோர் எனும் பாலேஷ்வர் நகர் அருகே உள்ள கடற்கரையில் இந்த சோதனை நடந்தது.

வெள்ளிக்கிழமை பகல் 12.52 மணியளவில் சண்டிபூர் கடற்பகுதியில் இருந்து ஒரு ஏவுகணை  ஏவப்பட்டது. பின்னர் 4 நிமிடம் கழித்து, வீலர் தீவில் இருந்து இடைமறித்து தாக்கும் சூப்பர்சானிக் ஏவுகணை ஏவப்பட்டது.

கண்காணிப்பு ரேடார்கள் தரும் சிக்னல்கள் உதவியுடன், சூப்பர்சானிக் ஏவுகணை குறித்த  நேரத்தில் சண்டிபூரில் இருந்து வந்த ஏவுகணையை நடுவானில் இடைமறித்து தாக்கி அழித்தது.

இதைத் தொடர்ந்து சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Speak Your Mind

*