Stay Connected...Subscribe Now

அட அதுக்குள்ள ஐஃபோன் 5 எஸ்.. நிஜமா… வதந்தியா?

ரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஆப்பிள் ஐஃபோன் வெளியாகி, சக்கைப் போடு போட்டு வருகிறது.

ஏதோ புதுப் பெண்ணைப் பார்க்கப் போவது போன்ற ஆர்வத்துடன் ஐஸ்டோர்களில் குவிந்து வருகின்றனர் வாடிக்கையாளர்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை, அந்தஸ்தின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டது ஐஃபோன் 5.

இந்த ஐஃபோன் 5 மீதான் காதலும் கிறக்கமுமே ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்குத் தீராத நிலையில், அடுத்து இதன் அடுத்த வர்ஷன் 5 எஸ் அல்லது ஐஃபோன் 6 என்ற பெயரில் வரவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிலர் இதனை வதந்தி என்று கூறினாலும், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த புதிய மாடல் வரும் 2013-ம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியாவது சாத்தியமே என ஆப்பிள் நிறுவன ப்ளாகில் தெரிவித்துள்ளனர்.

இந்தப் புதிய போனுக்கு ஐஃபோன் 5எஸ் அல்லது ஐஃபோன் 6 என பெயரிடத் திட்டமிட்டுள்ளார்களாம்.

முதல்கட்டமாக சோதனை ஓட்டத்துக்காக 50,000 முதல் 1 லட்சம் வரையிலான ஐபோன் 5எஸ் மாடலை தயாரிக்க உள்ளார்களாம்.

5 இன்ச் ஃபுல் ஹெச்டி ரெட்டினா ஸ்க்ரீன், குவாட்கோர் ப்ராசஸர் 7, நீண்ட நேரம் தாக்கு பிடிக்கக் கூடிய பேட்டரி என பல புதிய வசதிகளை இந்த ஐபோன் 5 எஸ் மாடலில் ஆப்பிள் நிறுவனம் தரும் என்கிறார்கள் அதற்குள்!

Speak Your Mind

*