Stay Connected...Subscribe Now

மேனுவல் கட்டுப்பாட்டுடன், புதுப்புது வண்ணங்களில் லிட்ரோ கேமரா அறிமுகம்!

மேனுவல் கட்டுப்பாட்டுடன் கூடிய சிறிய வகை லிட்ரோ காமிராக்கள் செவ்வாய்க்கிழமையன்று சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஷட்டர் ஸ்பீட், ஐஎஸ்ஓ சென்சிடிவிட்டி, நியூட்ரல் டென்சிட்டி மற்றும் ஆட்டோ எக்ஸ்போஸ் லாக் வசதிகள் கொண்டதாக இந்த காமிராக்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

புதிய நிறங்களில் வந்துள்ள இந்த கேமிராக்கள் பார்க்க மிகவும் அழகாக தோற்றமளிக்கின்றன. 8 ஜிபி திறன் கொண்ட பிங்க் மற்றும் பச்சை காமிராக்கள் 399 டாலர் விலைக்குக் கிடைக்கின்றன.

நீலம் மற்றும் கிரே வண்ணங்களில் வரும் லிட்ரோ கேமிராக்களில் 8 ஜிபி மற்றும் 16 ஜிபி திறன் கொண்டவை கிடைக்கின்றன. விணடோஸ், மேக் இரண்டுக்குமே ஏற்ற முறையில் லிட்ரோ கேமிராக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

-டெக்ஸோன்

Speak Your Mind

*