Stay Connected...Subscribe Now

நோக்கியாவின் ஆஷாவைக் காலி பண்ண வரும் சாம்சங்கின் ரெக்ஸ்!

IMG-20130214-WA0040

ன் வீழ்ச்சியிலிருந்து இப்போதுதான் மெல்ல மீண்டு வருகிறது நோக்கியா. இதற்கு முக்கிய காரணம் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஆஷா சீரிஸ் மொபைல் போன்கள்.

இப்போது அந்த போன்களுக்கு போட்டியாகக் களமிறக்கப்பட உள்ளது சாம்சங்கின் ரெக்ஸ்.

இந்த ரெக்ஸ் விலை ரூ 4280 முதல் 6490 வரை இருக்கும்.

மொத்தம் நான்கு மாடல்களில் இந்த ரெக்ஸ் வருகிறது.

முதல் மாடல் ரெக்ஸ் 60.

இதில் 2.8 இன்ச் ஸ்கிரீன், டச் ஸ்கிரீன், 10 இலவச கேம்கள், 1.3 மெகா பிக்சல் கேமரா, 1000 எம்ஏஎச் பேட்டரி, ப்ளூடூத், 16 ஜிபி மைக்ரோ யுஎஸ்பி சப்போர்ட் வசதி உண்டு.

ரெக்ஸ் 70 அடுத்த மாடல்.

இதில் 3 இன்ச் ஸ்கிரீன், 3.2 மெகா பிக்சல் கேமரா உண்டு. மற்ற வசதிகள் ரெக்ஸ் 60ல் உள்ளது போலத்தான் இதிலும்.

மூன்றாவது மாடல் ரெக்ஸ் 80.

இதில் 3.5 இன்ச் ஸ்கிரீன், 32 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்ட் சப்போர்ட் வசதி உண்டு.

நான்காவது மாடல் ரெக்ஸ் 90.

இதுவும் 3.5 இன்ச் ஸ்கிரீன்தான். 2 ஜி கனெக்டிவிடி உண்டு.

அனைத்துமே இரட்டை சிம் வசதி கொண்டவை.

 

Speak Your Mind

*