டெல்லி: பசுமை சூழலைப் போற்றும் நிறுவனங்களுள் உலகிலேயே நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளது இந்திய ஐடி நிறுவனமான விப்ரோ.
ஹெச்பி, ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் அடுத்துதான் இடம்பிடித்துள்ளன.
எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களில் மூன்று முக்கிய சுற்றுச்சூழல் விதிகளைக் கடைப்பிடித்தாக வேண்டும். மின்சார சிக்கனம், தட்பவெப்ப நிலை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுதல், பசுமையைப் பாதுகாத்தல். இந்த மூன்றையும் நிறைவேற்றும் வகையிலான பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும்.
இந்த வகையில் உலகிலேயே சாதனை படைத்த நிறுவனமாக விப்ரோவை தேர்வு செய்துள்ளது கிரீன்பீஸ் அமைப்பு.
இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும்கூட சுற்றுச் சூழல் மற்றும் பசுமையைக் காக்கும் விதத்தில் தனது மின்னணுப் பொருள்களை விப்ரோ உற்பத்தி செய்துள்ளது. அந்த வகையில் உலகின் அனைத்து எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறது விப்ரோ என கிரீன் பீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பசுமையை பாதிக்காத அளவு சிறப்பாக செயல்படும் உலகின் டாப் 10 நிறுவனங்கள் இவை:
1 Wipro
2 HP
3 Nokia
4 Acer
5 Dell
6 Apple
7 Samsung
8 Sony
9 Lenovo
10 Philips
Speak Your Mind